வீரராகவ கோவிலில் கனகவல்லி தாயார் புடவைகள் ரூ.1.63 லட்சத்துக்கு ஏலம்
ADDED :3439 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவ கோவிலில் முதல் முறையாக நேற்று, கனகவல்லி தாயாருக்கு வந்த புடவைகள், 1.63 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலுக்கு அமாவாசை தோறும், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கனகவல்லி தாயாருக்கு காணிக்கையாக, பட்டுப் புடவைகள் செலுத்துவது வழக்கம். இவ்வாறு காணிக்கையாக பெறப்பட்ட பட்டுப் புடவைகள், முதல் முறையாக கோவில் வளாகத்தில் நேற்று, ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் பக்தர்களிடம் இருந்து, 1.63 லட்சம் ரூபாய் பெறப்பட்டது. இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஏலம் நடைபெறும் என, கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் தெரிவித்தார்.