திருக்கோளக்குடியில் ஆனி பெருந்திருவிழா
ADDED :3438 days ago
திருப்புத்துார்: திருக்கோளக்குடி ஆத்மநாயகி அம்பாள் சமேத திருக்கோளநாதர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா துவங்கியது. ஜூன் 18ல் தேரோட்டம் நடைபெறும். காலை 8.30 மணிக்கு கொடியேற்றிய பின், பஞ்சமூர்த்திகள் திருநாள் மண்டபம் எழுந்தருளினர். இரவு 8 மணிக்கு காப்புக் கட்டப்பட்டு விழா துவங்கியது. ஜூன் 14ல் திருக்கல்யாணம், ஜூன் 18ல் தேரோட்டம்,ஜூன் 19ல் சுவாமி தீர்த்தம் அளித்தல் நடைபெறும்.ஜூன் 20ல் சுவாமி மலை ஏறுதலுடன் விழா நிறைவடைகிறது.