சேக்கிழார் குருபூஜை: திரு உருவ வீதியுலா!
ADDED :3435 days ago
விருத்தாசலம்: திருமுதுகுன்றம் சேக்கிழார் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் 15ம் ஆண்டு சேக்கிழார் குருபூஜை விழா நடந்தது. விருத்தாசலம் விரு த்தகிரீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள அனுசுயா திருமண மண்டபத்தில், காலை 6:00 மணிக்கு கொடியேற்றம், குத்து விளக்கேற்றம், சிவ பூஜை நடந் தது. ௮:00 மணிக்கு சேக்கிழார் திரு உருவ வீதியுலா நடந்தது. 9:30 மணியளவில் சொற்பொழிவு, திருவாசக முற்றோதுதல், மாலை 6:00 மணிய ளவில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.