உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயண பெருமாள் கோவில் உழவார பணியில் மாணவர் படை!

நாராயண பெருமாள் கோவில் உழவார பணியில் மாணவர் படை!

ஆர்.கே.பேட்டை: பெருமாள் கோவில் உழவார பணியில், தேசிய மாணவர் படையினர், நேற்று ஈடுபட்டனர். வங்கனுார், அஷ்டலட்சுமி உடனுறை  நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில்  தேசிய மாணவர் படையினர், நேற்று ஈடுபட்டனர்.  வங்கனுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த, தேசிய மாணவர் படை  மாணவர்கள், 15 பேர், நேற்று கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் வெளி பிரகாரம், கோபுரம், அஷ்டலட்சுமி சன்னிதி,  தண்ணீர் தொட்டி உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டன. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுதோறும் இங்கு, தொடர்ந்து உழவார பணி  மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !