திருப்பதி ஸ்ரீகாளஹஸ்தியில் புதிய விடுதி திறப்பு!
ADDED :3433 days ago
திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தியில், புதிய தங்கும் விடுதி வளாகத்தை, கோவில் நிர்வாகம் திறந்து வைத்துள்ளது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலுக்கு, ராகு கேது பரிகார பூஜை செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் கோவில் அருகில் வசதியாக தங்க, கோவில் நிர்வாகம், மாடவீதியை சுற்றி, தங்கும் விடுதிகளை கட்டியுள்ளது.நேற்று புதிதாக, 36 அறைகள் கொண்ட, ’பக்த கண்ணப்பா சதன்’ என்ற, தங்கும் வளாகத்தை கோவில் நிர்வாகம் திறந்து வைத்தது. சாதாரண பக்தர்களின் வசதிக்காக, ஒரு அறையின் வாடகை, 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.