உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

எல்லையம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

பாக்கம்: பாக்கம், எல்லையம்மன் கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  திருவள்ளூர் அடுத்த, பாக்கம் கிராமத்தில் உள்ளது,  எல்லையம்மன் கோவில். இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம், இன்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது.  முன்னதாக, கடந்த, 8ம் தேதி, முகூர்த்த  கம்பஸ்தாபனத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து, 14ம் தேதி காலை, மகா கணபதி  பூஜையும், மாலை, வாஸ்து சாந்தியும், முதல் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.  பின், நேற்று காலை, 9:15 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை  பூஜையும், வேதபாராயணமும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன. இன்று காலை, 7:40 மணிக்கு, 4ம் கால யாகசாலை பூ ஜையும், அதை தொடர்ந்து கலசங்கள் புறப்பாடும் நடைபெறும்.பின், காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீ ரால் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !