கிறிஸ்தவர்கள் புனித பயணம் ரூ.1 கோடி ஒதுக்கீடு!
ADDED :3421 days ago
சென்னை, :கிறிஸ்தவர்களின் புனித தலமான ஜெருசலேம் சென்று வர, நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், 2015 - 16ம் ஆண்டு செலவினமான, ஒரு கோடி ரூபாயை விடுவித்து, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கிறிஸ்தவர்கள், தங்களின் புனித தலமான, ஜெருசலேம் சென்று வர நிதியுதவி அளிக்கும் திட்டம், 2011 - 12ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம், 500 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்க, ஆண்டுதோறும், ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, 2015 - 16ம் நிதியாண்டில், 500 கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்ல நிதியுதவியாக, ஒரு கோடி ரூபாயை விடுவித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் உதயசந்திரன் பிறப்பித்துள்ளார்.