வீர ஆஞ்சநேயர் கோவிலில் யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் பூஜை
ADDED :3421 days ago
அவிநாசி : அவிநாசி கரிவரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்க, முகூர்த்தக்கால் பூஜை நேற்று நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான, கரிவரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில்களில், அடுத்த மாதம், 11ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே, யாகசாலை அமைக்கப்படுகிறது. இதற்கான, முகூர்த்தக்கால் நடுவதற்கான சிறப்பு ஹோம பூஜைகள், நேற்று நடைபெற்றன. பூஜைக்குபின், பெருமாள் கோவிலில் இருந்து, முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பப்பட்டு, நடப்பட்டது. கருவறையில் திருப்பணி நடப்பதால், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், பாலாலய பூஜைகள் நேற்று நடைபெற்றன. இதனால், உற்சவ மூர்த்திகளுக்கு மட்டும் தினசரி பூஜை நடத்தப்படுவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.