உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரளிப்பாறை அடிவார கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா

அரளிப்பாறை அடிவார கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா

சிங்கம்புணரி: அரளிப்பட்டியில் அரளிப்பாறை அடிவார கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை,விக்னேஷ்வர பூஜை, பூரணாகுதி யாகசாலை பூஜைகள், திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் கருப்பசுவாமி,பரிவார தெய்வங்களுக்கு நன்னீராட்டு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. *கல்லம்பட்டி விநாயகர், சக்திவேல் முருகன்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்கை,கோ பூஜை, கலசபூஜை,நாடிசந்தானம்,பூரணாகுதி யாக சாலை பூஜைகள் சேதுராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. காலை 10 மணிக்கு கோபுர கலச நன்னீராட்டு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !