காடையாம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3430 days ago
காடையாம்பட்டி: காடையாம்பட்டி, பொட்டியபுரம், பம்பரபட்டியனூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகம், கடந்த, 16ம் தேதி துவங்கியது. அன்று, பொட்டியபுரம் காசி முனியப்பன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த கலசம் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின், விக்னேஸ்வர் பூஜை, பஞ்சகவ்யம், வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில், கலச ஆராதனை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், 108 மூலிகை பூஜை உள்ளிட்டவை நடத்தி, காலை, 6 மணிக்கு மூலஸ்தன கோபுரத்துக்கு வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.