ஆந்திராவுக்கு பயணமான ஐம்பொன் சிலைகள்!
கும்பகோணம் : தஞ்சை மாவட்டம், சுவாமிமலையிலிருந்து, நான்கு ஐம்பொன் சிலைகள், ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பொன்னூரில் புகழ்பெற்ற கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரராவ், ஐம்பொன்னாலான ராமர், லட்சுமணன், சீதாதேவி, ஆஞ்சநேயர் ஆகிய உற்சவ மூர்த்திகளை செய்து தருமாறு, சுவாமிமலை ராமலிங்கம் ஸ்பதியிடம் கேட்டுக் கொண்டார்.அதன்படி, கடந்த 4 மாதமாக, தலா 2 அடியிலான, கோதண்டராமன், லட்சுமணன், சீதாதேவி, அஞ்சலி அஸ்தம், 1 அடி உயரத்தில் ஆஞ்சநேயர், ஆகிய சிலைகள் வடிவமைக்கப்பட்டன. இதன் மொத்த எடை, 100 கிலோ. அனுமந் ஜெயந்தி அன்று, பிரதிஷ்டை செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக, கோவிலில் நான்கு ஐம்பொன் மூர்த்தியும், 48 நாட்களுக்கு தானியவாசம் செய்வதற்காக, நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுவாமிமலை ராமலிங்கம் ஸ்தபதி தெரிவித்தார்.