உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்!

மாசாணியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்!

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஓணம் பண்டிகையான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். நேற்று வெள்ளிக்கிழமை, ஓணம் திருநாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.நேற்று காலை முதலே பக்தர்கள் திரண்டனர்.

வளர்ச்சிப்பணிகள்: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 1 கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு மண்டபங்கள் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. அன்னதான மண்டபம் 30 லட்சம் ரூபாயிலும், கருணை இல்லம் ரூ. 40 லட்சத்திலும், பொங்கல் மண்டபம் ரூ. 20 லட்சத்திலும் பணிகள் நடக்கின்றன. முடிகாணிக்கை மண்டபம் கட்டும் பணி மட்டும் துவங்கவில்லை. விரைவில் இந்த பணியும் துவங்கப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர்கள் செந்தமிழ்செல்வன்,சேகர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பணிகளை கவனித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !