உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்!

பவுர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ தூரம் கிரிவலம் சென்று, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். நேற்று ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மாலையில் இருந்து லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று வழிபட்டனர். முன்னதாக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபி ?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மாட வீதியான திருவூடல் தெருவில், கிரிவலம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இருந்ததால், கிரிவலம் செல்லும் பக்தர்கள், காய்கறி மார்க்கெட் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில், 18 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதில், மாடவீதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !