அறுபது நாளில் அந்நியன்!
ADDED :3557 days ago
1893ல் அமெரிக்காவில் நடந்த சமயமாநாட்டில் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்ற விவேகானந்தர், சிகாகோ மட்டுமின்றி இன்னும் சில நகரங்களிலும் உரை நிகழ்த்தினார். சூறாவளி இந்து (தி சைக்ளோன் ஹிந்து), தெய்வீக உரிமை பெற்ற நாவலர்(ஓரேட்டர் பை டிவைன் ரைட்) என்று அடைமொழிகள் வைத்து மக்கள் அவரை பாராட்டினர். பின், இங்கிலாந்து சென்று வேதாந்தக் கருத்துகளை அவர் எடுத்துரைத் தார். 1900ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த சமய வரலாற்றுக்கழக மாநாட்டில் பங்கேற்றார். அங்கே, பிரெஞ்சு மொழியில் உரையாற்றினால் சிறப்பாக இருக்கும் எனக்கருதி, அறுபதே நாட்களில் அந்நிய மொழியான பிரெஞ்சை கற்றுத் தேர்ந்தார். இந்த பயணத்தின்போது தான் கிழக்கும்மேற்கும், நாடோடி என்ற இரு நுõல்களையும் அவர் எழுதினார்.