திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயிலில் கிரிவலம்
ADDED :3445 days ago
திருப்புத்துார்: திருக்கோளக்குடி திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்பாள் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. கோளங்களால் ஆன இம்மலையில் மூன்றடுக்கு கோயில் அமைந்துள்ளது. கோயில்கள் அமைந்துள்ள மலையைச் சுற்றி பக்தர்கள் பவுர்ணமியன்று கிரிவலம் வருகின்றனர். சுற்றுப்புற தெய்வங்களான ஈஸ்வரன், விநாயகர், அய்யனார், தேரடிக்கருப்பர், பொன்னழகி அம்மன் வழிபாட்டிற்குப் பின்னர் பக்தர்கள் கிரிவலம் துவக்கினர். கிரிவலச் சுற்றுக்குப் பின் மலையில் எழுந்தருளியுள்ள சுவாமி,அம்பாளுக்கு 11 வித திரவியங்களால் அபிஷேகம் நடந்து பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாட்டினை கிரிவலக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சந்திரன் செய்தார்.