உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு 3 கோவில் உண்டியல்களில் ரூ.10 லட்சம் காணிக்கை

ஈரோடு 3 கோவில் உண்டியல்களில் ரூ.10 லட்சம் காணிக்கை

ஈரோடு: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி ரங்கநாதர், மகிமாலீஸ்வரர் கோவில் உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. இந்த கோவில்களில் மொத்தம், 18 உண்டியல்கள் உள்ளன. இவை மூன்று மாதத்துக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. அதன்படி நேற்று எண்ணப்பட்டது. உண்டியல்களில் மொத்தம், 9 லட்சத்து, 97 ஆயிரத்து, 342 ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது. இதில்லாமல், 50 கிராம் தங்கம், 328 கிராம் வெள்ளி, ஒரு படிகமாலை, ஒரு முத்துமாலை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, ஈரோடு உதவி ஆணையர் முருகையா, அறநிலையத்துறை ஆய்வாளர் கொழந்தாயம்மாள், செயல் அலுவலர் விமலா முன்னிலையில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !