உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் தற்காலிக கடைகள் ஏலம்

ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் தற்காலிக கடைகள் ஏலம்

ஈரோடு: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் தற்காலிக கடைகள், டூவீலர் ஸ்டாண்ட் மற்றும் தென்னை மர மகசூலுக்கு ஏலம் நேற்று நடந்தது. இதில் தற்காலிக கடைகள், 6 லட்சத்து, 75 ஆயிரத்து 601 ரூபாய்க்கும், தென்னை மர மகசூல், 2,800 ரூபாய்க்கும் ஏலம் போனது. டூவீலர் ஸ்டாண்ட் ஏலத்துக்கு, யாரும் டிபாசிட் தொகை செலுத்தவில்லை. இதனால் அதற்குரிய ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் ஓராண்டுக்கு கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈஸ்வரன் கோவில் முன்பு டூவீலர் ஸ்டாண்ட் ஏலம் விட தடை விதித்து மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அப்பகுதி முழுவதும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம். காலங்காலமாக உள்ள நடைமுறையை மாற்ற முடியாது. அதற்கான விளக்கம் மாநகராட்சிக்கு தரப்பட்டது. டிபாசிட் செலுத்தாமல் ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டை ஏற்க முடியது. போலீஸ் பாதுகாப்புடன், குறித்த நேரத்தில் ஏலம் நடத்தி முடிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !