உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா

கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா

மோகனூர்: ஆண்டிப்பாளையம் தொட்டிய கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தில், தொட்டிய கருப்பண்ண சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். பல்வேறு காரணங்களால், கடந்த, 23 ஆண்டுகளாக கோவில் திருவிழா நடத்தவில்லை. இந்நிலையில், தற்போது திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று மாலை, 5.30 மணிக்கு பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இன்று (ஜூன், 21) காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோவிலை அடைகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகமும், இரவு, 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழச்சி நடக்கிறது. வரும், 23ம் தேதி, அதிகாலை, 4 மணிக்கு பொங்கல் வைத்து கிடாவெட்டு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !