நெல்லையப்பர் கோயிலில் தீர்த்தவாரி ஆனித்திருவிழா நேற்றுடன் நிறைவு!
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் நிறைவுற்றதையடுத்து இன்று பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. திருநெல்வேலியின் நடுநாயகமாக திகழும் நெல்லையப்பர் கோயிலின் ஆனிப்பெருந்திருவிழா பிரசித்திபெற்றதாகும். கடந்த 11ம் தேதி ஆனிவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், சசப்பர வீதி உலாக்களும், கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன. ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தது. மாலையில் சுவாமி,அம்பாள் உள்ளிட்ட ஐந்துதேர்களும் நிலையம் வந்துசேசர்ந்தன. நிறைவு நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று நடந்தது. முன்னதாக சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சசமூர்த்திகளுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பின் சசப்பரத்தில் அஸ்திரதேவர், அஸ்திரதேவி எழுந்தருளி அம்மாள் சசன்னதியில் உள்ள பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று இரவில் கொடியிறக்கம் நடந்தது.க்கிறது.