உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலைக் காக்கும் பூட்டுச்சாமி!

கோயிலைக் காக்கும் பூட்டுச்சாமி!

மதுரையை காக்கும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வசிக்கும் கோயிலை இந்த பூட்டுச்சாமிதான் பாதுகாக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே. இவருக்கு பேரு சட்டையப்பர். கிட்டத்தட்ட பைரவர் சுவாமி மாதிரி. மீனாட்சி அம்மன் கோயில் நவக்கிரக சன்னதி அருகே கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவர் அருகில் வரிசையாக பூட்டப்பட்ட பூட்டுகள் மணிகளாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் பின்னணி கொஞ்சம் சுவாரஸ்யமானது. யாராவது பிரச்னையில் இருந்து விடுபட முடியாமல் லாக் ஆகி தவித்துக் கொண்டிருப்பவர்கள் இவரை அணுகுகின்றனர். பிரச்னை தீர வேண்டும் என வேண்டிக் கொண்டு, இவர் பக்கத்தில் பூட்டை பூட்டிவிட்டு, சாவியை உண்டியலில் போட்டுவிட்டு செல்கின்றனர். சில நாட்களிலேயே வேண்டுதல் பலித்துவிடுகிறதாம். இதனாலேயே இந்த சட்டையப்பருக்கு பூட்டுச்சாமி என்று புனைப் பெயர் வந்துவிட்டது. தினமும் கோயிலின் கடைசி பூஜை இவருக்கு தான் நடக்கிறது. காரணம், இரவு முழுவதும் கோயிலை வலம் வந்து பாதுகாப்பாராம். ஆச்சரியமா இருக்குல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !