உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்ப மாரியம்மன் கோவிலில் 24ம் தேதி செடல் திருவிழா

கும்ப மாரியம்மன் கோவிலில் 24ம் தேதி செடல் திருவிழா

கடலுார்: வண்டிப்பாளையம், கும்ப மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் 24ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. கடலுார், பழைய வண்டிப்பாளையம், ராமராஜன் தெருவில் அமைந்துள்ள கும்ப மாரியம்மன் கோவிலில், வரும் 24ம் தேதி  செடல் தெருவிழா நடக்கிறது. அதனையொட்டி, அன்று காலை ஊற்றுக்காட்டம்மன் கோவிலில் இருந்து கரகம் வீதியுலா, பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.  பிற்பகல் 2:00 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் திருவிழா, இரவு அம்மனுக்கு கும்பம் படைத்து வீதியுலா நடக்கிறது. மறுநாள் 25ம் தேதி இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம், 26ம் தேதி இரவு மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !