உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னியநல்லுாரில் குருபூஜை விழா

வன்னியநல்லுாரில் குருபூஜை விழா

புதுச்சேரி: மரக்காணம் அடுத்த வன்னியநல்லுாரில், தேவராசு சுவாமி சித்தரின் 68வது குருபூஜை விழா இன்று (22ம் தேதி) நடக்கிறது. காலை 7:00 மணிக்கு மங்கல விளக்கு ஏற்றுதல், மகா சமாதியில் அலங்கார ஆராதனை, சற்குரு நாமவளி ஜெபிக்கப்படுகிறது.  சந்தோஷ சித்தர் பரப்பிரம்மா ஞான மகாதிபதி சுவாமி ஓங்கார நந்தா எழுந்தருளி அருளாசி வழங்குகிறார். காலை நடக்கும் நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்ட  சப் கலெக்டர் ஜெயக்குமார், சூனாம்மேடு இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் பங்கேற்கின்றனர். கணேஷ் சிவாச்சாரியார், ராஜசேகர குருக்கள்,  குரு பூஜை ஹோமத்தை நடத்தி வைக்கின்றனர். 10:30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு புதுச்சேரி காங்,. பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் முன்னிலை வகிக்கிறார். கீதா முத்தையா குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு மகேஸ்வர பூஜையும்,  மாலை 6:00 மணிக்கு, தேவராசு சித்தருக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவராசு சுவாமி சித்தர் கோவில் அறக்கட்டளை தலைவர் சிவசித்தானந்த குமரன் மற்றும் வன்னியநல்லுார் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !