குங்கும காளியம்மன் கோயில் உற்சவ விழா
ADDED :3424 days ago
வடமதுரை, : அய்யலுார் பேரூராட்சி நைனான்குளத்துப்பட்டி, குளத்துப்பட்டியில் செல்வவிநாயகர், குங்கும காளியம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. அம்மன் கரகம் அலங்கரித்து கோயில் கொண்டு வரும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல், விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.