வாழைக்காட்டு மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3418 days ago
கொடைக்கானல், : கொடைக்கானல் வில்பட்டி கிராமம் வாழைக்காட்டு மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிதுன லக்கினத்தில் மகா கணபதிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நடந்தது. கடந்த செவ்வாய் அன்று குதிரை நடனமும், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யந்திர ஸ்தாபனம், கோபுர கலசம், சாமியை நிலைநாட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை வேள்விகள் தொடக்கம், பூர்வாங்க பூஜைகள், யாக பூஜைகள், யாக வேள்வி, திரவியாகுதி, கனிர்வயகமயம் நிகழ்ச்சிகள் நிறைவேற்றப்பட்டு கணபதிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மகா கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலய திருப்பணி கமிட்டி தலைவர் கணேசன், செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டனர்.