அவனியாபுரம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3418 days ago
அவனியாபுரம்: அவனியாபுரம் குருநாத சுவாமி சமேத அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு விமானம், சுவாமிக்கு விமானத்துடன் கூடிய கர்ப்பகிரகம், துர்க்கை அம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்திக்கு தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டன. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின் மூலவர்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோயில் நிர்வாகிகள், திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.