உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா துவங்கியது

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா துவங்கியது

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் காலை 7:00 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த கோவில் முன் உள்ள கொடிமரத்தில் 7:25 மணிக்கு கொடியேற்றப்பட்டது.


இதில் கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொறித்த கொடிமரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் பாலசரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று செவ்வாய்கிழமை அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வர அரண்மனை சந்தன கருப்புசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர்.


பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு வர பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மார்ச் 10ல் நடை பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !