உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா

ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.


நேற்று, ராகவேந்திரர் கோவிலில் இருந்து, கும்பம் மற்றும் கம்பம் எடுத்துவந்து, சிறப்பு பூஜைகளுடன் கம்பம் நடப்பட்டது. இன்று, படைக்கலம் மற்றும் தீர்த்தக்குடம் நிகழ்ச்சி; நாளை (25 ம் தேதி ) மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் விழாவும் நடக்கிறது.


முதல் நாளான நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சமயபுரம் மாரியம்மன் அலங்கார பூஜையும் நடந்தது.


இன்று, ஸ்ரீஆதிபராசக்தி அலங்காரம், நாளை (25ம் தேதி) தங்ககவச அலங்காரம்; 26ல் பண்ணாரி அம்மன்அலங்காரம், 27ல் மீனாட்சி அம்மன் அலங்கார பூஜைகள் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !