உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், கடகந்திருட பாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா கடந்த, 17 ல் துவங்கியது.


முளைப்பாலிகை, தீர்த்த கலசம், கோபுர கலசம் ஆலயத்திற்கு அழைத்து வருதல், விநாயகர் வழிபாடு மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கோபுரத்தில் கண்திறத்தல், மூன்றாம் கால யாக பூஜை, நான்காம் கால யாக பூஜை ஆகியன நடந்தது.


கோபுரம் மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ சக்தி மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


கும்பாபிஷேகத்தை கண்டியன் கோவில் ஆதீனம் தங்கமணி சிவாச்சாரியார் மற்றும் சிவ சுப்ரமணிய பண்டித குருசாமி ஆகியோர் நடத்தி வைத்தனர்.


தொடர்ந்து மஹா அபிஷேகம், தச தரிசனம், திருக்கல்யாணம், விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !