உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதர் கோவிலில் ராஜகோபுர பணி துவக்கம்

அரங்கநாதர் கோவிலில் ராஜகோபுர பணி துவக்கம்

காரமடை : அரங்கநாதர் கோவிலில் ஏழுநிலை ராஜகோபுரத்தின் செங்கல் கட்டடம் மற்றும் சுதை செய்யும் பணிகள் துவங்கின. காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் மிகவும் தொய்வாக நடந்ததால், கடந்த 6 ஆண்டுகளில் கல்காரப்பணிகள் மட்டும் முடிக்கப்பட்டன. தற்போது கோபுரத்தின் செங்கல் மற்றும் சுதை வேலை பணிகள் துவங்கியுள்ளன.
கோவிலில் 65 லட்சம் ரூபாயில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் 2005ம் ஆண்டு துவங்கின. 42 அடி நீளம், 29 அடி அகலத்தில், 14 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இருபத்தி மூன்றரை அடி உயரத்துக்கு கல்காரப்பணிகள் முடிந்து கான்கிரீட் போட்டு முடிக்கப்பட்டுள்ளன. ஏழு நிலை ராஜகோபுரத்தின் ஐம்பத்தாறரை அடி உயர செங்கல் கட்டடம் மற்றும் சுதை வேலை கட்டுமானப் பணிகள் துவங்கின. குறிப்பிட்ட காலத்தில் விரைவாக செய்து முடிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !