கோவை வல்லப கணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3478 days ago
கோவை :பீளமேடு வல்லப கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் உள்ள, வல்லப கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன் 21ல் கணபதி பூஜையுடன் துவங்கியது.
அன்று மாலை, முதற்கால யாக வேள்வி பூஜையும், 22ம் தேதி காலை, இரண்டாம் காலயாக வேள்வியும், மாலை மூன்றாம் கால யாக வேள்வியும் நடந்தன. நேற்று காலை, 7:30 மணிக்கு, நான்காம் காலயாக வேள்வியை தொடர்ந்து, கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன; அறங்காவலர் கோபால கிருஷ்ணன் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேள்வி குண்டத்தில் இருந்து, கலசங்களை எடுத்து வந்தனர். காலை, 9:30 முதல் 10:00 மணிக்குள், விமான கோபுரத்துக்கும், வல்லப கணபதிக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.