விக்கிரவாண்டி கப்பியாம்புலியூர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :3427 days ago
விக்கிரவாண்டி: கப்பியாம்புலியூர் அரசமரத்தடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் காலனி பகுதியிலுள்ள அரசமரத்தடி விநாயகர் , வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், பிரம்மா, விஷ்ணு கோவில்கள் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு, கலச புறப்பாடு நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள், விநாயகர் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். யாகசாலை பூஜைகளை சந்திரசேகர குருக்கள், நடராஜ குருக்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஒன்றிய சேர்மன் சுமதி நாகப்பன், மற்றும் கிராம நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.