ரோமாபுரி அந்தோணியார் ஆலய தேர் பவனி விழா
ADDED :3692 days ago
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி திருவிழா நடந்தது.
இதையொட்டி, கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு 8:00 மணியளவில் அலங்கரித்த தேரில் அந்தோணியார் தேர் பவனி, கடலுார் ஆக்னஸ் குருமட பங்கு தந்தை ரொசாரியோ, புனித பால் மெட்ரிக் பள்ளி நிர்மல்ராஜ், பங்கு தந்தைகள் கும்பகோணம் ரெஜிஸ், முகையூர் ஆரோக்கிய ஜான் ராபர்ட், கூனங்குறிச்சி கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.