உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாக்கூர் கலிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

வாக்கூர் கலிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கலிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. வாக்கூர் கலிவரதராஜ பெருமாள்  கோவில் புதுப்பிக்கப்பட்டு,  ராஜகோபுரம் புதியதாக கட்டி, கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 10:00 மணிக்கு,  கலி வரதராஜ பெருமாள் கோவில் கோபுரம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வாக்கூர் சேஷாத்திரி, சாயிராம்  மற்றும் சீனிவாச பட்டாச்சாரியார் உள்ளிட்ட குழுவினர், பூஜைகளை நடத்தினர். இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் பிரகாஷ் , ஆய்வாளர்  சரவணன் உள்ளிட்டோர், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !