உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் தரைகாத்த காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கடலூர் தரைகாத்த காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கடலூர் : கடலூரில் நேற்று நடந்த தரைகாத்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். கடலூர் புதுப்பாளையம் கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தரைகாத்த காளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 7ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து 8ம் தேதி நக்கிரக, சுதர்சன, தன்வந்திரி ஹோமங்களும், 9ம் தேதி கோ பூஜை, தன பூஜை, வ÷ஷாத்ர ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. நேற்று முன்தினம் (10ம் தேதி) இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 4 மணிக்கு விக்ன விநாயகர் பூஜை மற்றும் நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, ஸ்பரிசாகுதி, அஸ்த்ரஹோமம், மூலமந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !