உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி கைலாசநாதர் கோவில் தல வரலாறு எங்கே?

காஞ்சி கைலாசநாதர் கோவில் தல வரலாறு எங்கே?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், கோவிலின் வரலாற்றை  தெரிந்து கொள்ள  முடியாமல், கோவிலை பார்த்து விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தல வரலாறு பலகை வைக்க  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   காஞ்சிபுரத்தின் கலைக் கோவில் என, அழைக்கப்படும் கைலாசநாதர் கோவில், 7ம் நு ாற்றாண்டில், ராஜசிம்ம பல்லவன் காலத்தில் கட்டடப்பணி  துவங்கி, அதன் பின் நரசிம்ம வர்ம பல்லவன், மகேந்திர வர்ம பல்லவன்  காலத்தில் முழுமை பெற்றது.  இக்கோவிலில், 1,000த்திற்கும் மேற்பட்ட  சிற்பங்கள் உள்ளன. மணல் கற்களால் செய்யப்பட்ட இந்த  சிற்பங்கள், இன்னும் காண்போரை வியக்க வைக்கும் வகையில் இருந்து வருகின்றன.  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து  செல்லும் இந்த கோவிலில் தல வரலாறு பலகை வைக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பய ணிகளுக்கு முழுமையான வரலாறு  தெரியாத நிலை உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகத்திலும், தொல்லியல் துறை பராமரிப்பிலும் இந்த கோவில்  இருந்து வருகிறது.  கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் இங்கு  வைக்கப்பட்ட தல வரலாறு பலகை சேதம் அடைந்ததால் எடுக்கப்பட்டதாக கூறப் படுகிறது.  அதன் பின் வைக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் கோவில் வரலாறு பலகை வைக்க  நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !