விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3396 days ago
பெருந்துறை: காஞ்சிக்கோவிலை அடுத்துள்ள பள்ளபாளையத்தில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. கூனம்பட்டி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ நடராச சுவாமிகள் தலைமை தாங்கினார். திருப்பூர் எம்.பி., சத்தியபாமா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.