புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழா!
ADDED :3395 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் மிருத்திகா பிருந்தாவனத்தில் 9ம் ஆண்டு ஸ்ரீபிராதுர் பாவோத்சவம் நடந்தது. ரகோத்தம ஆச்சார் தலைமையில், ரமேஷ் ஆச்சார், ராகவேந்திர ஆச்சார் உள்ளிடோர் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். தொடர்ந்து மகா தீபாரதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.