திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் தீபம் ஏற்றும் இடம் சீரமைப்பு!
ADDED :3395 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக தீபம் ஏற்றும் இடம் ரூ.2 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில் சனி பரிகார தலமாக திருநள்ளார் விளங்குவதால், நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தபிறகு, பக்தர்கள் கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றி வழிபடுவர். தற்போது, 300க்கு மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் தீபம் ஏற்ற வசதியாக, ரூ.2 லட்சம் மதிப்பில், தீபம் ஏற்றும் இடம் சீரமைக்கப்பட்டு, விளக்கு ஏற்ற மேடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.