உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் ஒரே நாளில் ரூ.4.22 கோடி வசூல்!

திருமலையில் ஒரே நாளில் ரூ.4.22 கோடி வசூல்!

திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலில், ஒரே நாளில், 4.22 கோடி ரூபாய், உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை, தேவஸ்தானம் அன்றே கணக்கிட்டு, வங்கியில் வரவு வைத்து வருகிறது. ஜூன், 25 மாலை முதல், 26 மாலை வரை ஒரு நாளில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில், 4.22 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த ஆண்டில், உண்டியல் மூலம் கிடைத்த அதிகபட்ச வருவாய் இது என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மோடி சகோதரர் வழிபாடு : திருமலை ஏழுமலையானை, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரமோத் மோடி, நேற்று காலை, வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் வழிபட்டார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று, தரிசன ஏற்பாடு, தங்கும் வசதிகளை செய்தனர். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள், ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !