நித்திஸ்வரத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3583 days ago
காரைக்கால்: காரைக்கால் அடுத்த நித்திஸ்வரத்தில் உள்ள நித்திய கல்யாணி சமேத நித்திஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவி உடனுறை கால பைரவருக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மேலும் கோவிலில் உள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. புனித நீர் கொண்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.