நீலமங்கலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள்
ADDED :3432 days ago
கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் உள்ள பெரியாண்டவர், வெண்ணியம்மன், கோதண்டராமர், ஏகாம்பரேஸ்வரர், தண்டபாணி ஆகிய கோவில்களில் 30 சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. உலக நலன் வேண்டியும் ஆன்மிகம், விவசாயம் தழைக்கவும் பிரார்த்தனைகள் செய்து பூஜைகள் நடந்தது. லலிதா சகஸ்ரநாமம், தேவி மகாத்மியம், கந்தசஷ்டி கவசம், பன்னிரு திருமுறைகள் வாசித்து வேத பாராயணம் நடந்தது. சென்னை பரணி சாஸ்திரி, நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.