தயானந்த சுவாமிகள் மடாலயத்தில் குருபூஜை!
ADDED :3582 days ago
கடலுார்: கடலுார், புதுப்பாளையம் தயானந்த சுவாமிகள் மடாலயத்தில் குருபூஜை நடந்தது. கடலுார், புதுப்பாளையத்தில் உள்ள தயானந்த சுவாமிகள் மடாலயத்தில் 111வது ஆண்டு குருபூஜை விழாவையொட்டி கடந்த 25ம் தேதி சகஸ்ரநாம அர்ச்சனையும், விசேஷ ஆராதனையும் நடந்தது. நேற்று முன்தினம் சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ ஆராதனை, தயானந்த சுவாமிகள் வீதியுலா நடந்தது. நேற்று காலை மகா அபிஷேகம், தீபாராதனை, தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.