உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தியா மண்டபத்தில் ராதா கல்யாண மகோற்சவம்!

அயோத்தியா மண்டபத்தில் ராதா கல்யாண மகோற்சவம்!

சென்னை: உலக நன்மைக்காக ராதா கல்யாண மகோற்சவம், அயோத்தியா மண்டபத்தில் இன்று நடக்கிறது. சென்னை, மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா அசுவமேத மகாமண்டபம் அமைந்துள்ளது. இங்கு, உலக நன்மைக்காக ராதா கல்யாண மகோற்சவம், இன்று நடத்தப்படுகிறது. இன்று மாலை, 5:30 மணிக்கு தொடய மங்களம், குரு கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 7:30 மணிக்கு, ராதா கல்யாண மகோற்சவத்தை உடையாளூர் கல்யாண ராம பாகவர் செய்து வைக்கிறார். இதையடுத்து, தஞ்சை சாஸ்திரா பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்ற கல்யாணராம பாகவதருக்கு, பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில், முரளீதர சுவாமிகள் தலைமை தாங்கி, அருளாசி வழங்குகிறார். மகோற்சவத்தின் கடைசி நிகழ்வாக நலங்கு, ஆஞ்சநேயர் உற்சவம், மங்களம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !