ரமலான் சிந்தனைகள்-25: கவனமாக இருங்கள் பெண்களே!
ஒழுக்கத்தின் அடிப்படை ஆண், பெண் உறவில் தான் இருக்கிறது. குறிப்பாக, ஆண்களுடன் பழகும் விஷயத்தில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். “நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளரின் மனைவிகள் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்,” என ஒரு வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு பெண் நல்ல அலங்காரம் செய்து கொண்டால் தன் கணவர், திருமண உறவு அல்லாத உறவினர்கள் (சகோதர வகையினர்), வேலையாட்கள், சிறுவர்கள், பிற பெண்கள் மத்தியில் நடமாடலாம். மற்ற ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்பு பர்தா அணிந்தே வரவேண்டும்.இதை விட்டு விட்டு ஆடம்பர அலங்காரத்துடன் பெண்கள் நடமாடுவது அவர்களுக்குத்தான் ஆபத்தை தரும் என்பதே இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.49 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி