பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3509 days ago
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் கோவிலைச் சுற்றி வலம் வந்தார். 10.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.