குருசாமி சமாது கோயிலில் மகா குருபூஜை
ADDED :3423 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பலபுளி பஜார் குருசாமி சமாது கோயிலில் ஆனி மாத கார்த்திகை நட்சத்திர மகா குருபூஜை மற்றும் கும்பாபிஷேக விழா துவங்கியது. காலையில் மகா குருபூஜை நடந்தது. பிற்பகல் நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் கலந்துகொண்டனர். ஜூலை 10ல் தீர்த்தவாரி ஊர்வலம், ஜூலை 11ல் காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழா நாட்களில் இன்னிசை, பாராயணம், சொற்பொழிவு, நாதஸ்வர நிகழ்ச்சி நடக்கிறது.