சேமங்கி மதுரை வீரன் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :3416 days ago
சேமங்கி: கரூர் மாவட்டம், சேமங்கியில் உள்ள மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சுவாமிகளுக்கு சந்தனம், இளநீர், பழச்சாறு, திருமஞ்சனம், சந்தனம், திரவியப்பொடிகள் கொண்டு நடந்த சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். பல்வேறு மலர்களால் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடந்தது. சேமங்கி பகுதி சுற்றிலும் உள்ள கிராமப்பகுதி மக்கள் இதில் பங்கேற்றனர்.