சித்தலூர் அம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3575 days ago
தியாகதுருகம்:சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில், மகாளய அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இரவு உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் அருள்பாலித்தார். ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி சிறப்பு ஆராதனைகள் நடந்தது.