உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும்

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும்

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துவிட்டு செல்கின்றனர். மேலும், மலைக்கோவிலில், கடைகள் மற்றும் கோவில் குருக்கள் என, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மலைக்கோவிலில் வசிக்கும் குருக்கள் மற்றும் கடைக்காரர்கள், தங்களது அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் தேவை என்றால், மலையில் இருந்து கீழே, திருத்தணி - அரக்கோணம் சாலைக்கு தான் செல்ல வேண்டும். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களுக்கு திடீரென தேவைப்பட்டால், 3 கி.மீ., துாரம் கீழே இறங்கி வந்து தான், ஏ.டி.எம்., மையம் மற்றும் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பக்தர்கள், வியாபாரிகள் நலன் கருதி மலைக்கோவில் வளாகத்தில், அரசுடைமை வங்கிகளின் ஏ.டி.எம்., மையமோ அல்லது தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்., மையமோ அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !