உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்30: மகிழ்வுடன் கொண்டாடுவோம்

ரமலான் சிந்தனைகள்30: மகிழ்வுடன் கொண்டாடுவோம்

புனிதமான நோன்பு முடிக்கும் நேரம் வந்திருக்கிறது. நோன்பு நோற்றதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப்புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிளவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்றோம். இதனால் தான், ரமலான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதுடன், நல்ல சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் நன்மையான வார்த்தைகளை பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் இணைந்து வாழ வேண்டும். ஒரு ஏழைக் குடும்பத்தையாவது ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவ வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும். “பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், ’நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,’ என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு,அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய நல்ல சிந்தனைகளுடன் பெருநாளைக் கொண்டாட தயாராவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !